மாநாடு, கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் கமல்ஹாசனின் 232வது படமாகும். இப்படம் தொடர்பான போஸ்டர் கடந்த செப்டம்பர் மாதமே வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இன்று கமல்ஹாசனின் பிறந்தநாள் என்பதால் இப்படத்தின் தலைப்பு தொடர்பான டீசர் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்தது.
தற்போது அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘விக்ரம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 1986ல் கமல், அம்பிகா, சத்தியராஜ் ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம் விக்ரம். தற்போது அதே தலைப்பு இப்படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.மேலும், டைட்டில் வீடியோ மரண மாஸாக அமைந்துள்ளது.
இந்த வீடியோ கண்டிப்பாக கமல் ரசிகர்களுக்கு கமலின் பிறந்தநாள் விருந்து என்றுதான் சொல்ல வேண்டும்.
[embedded content]
Source: Vellithirai News