லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய இத்திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போனது. படத்தின் போஸ்டர் மட்டுமே இதை வரை வெளியானது. டீசரோ, டிரெய்லர் வீடியோ இதுவரை வெளியாகவில்லை. அதேபோல், இப்படம் எப்போது வெளியாகும் எனவும் தெரியவில்லை.
எனவே, விஜய் ரசிகர்கள் காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போய்விட்டனர். தற்போது தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, தீபாவளி விருந்தாக மாஸ்டர் வெளியாகுமா என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அதை தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டது. தற்போது படத்தை ரிலீஸ் செய்தால் கொரொனா பயத்தால் ரசிகர்கள் தியேட்டருக்கு வரமாட்டார்கள். படம் பெருத்த நஷ்டமடையும். எனவே, இன்னும் சில மாதங்கள் ஆனாலும் சரி, முன்பு போல் ரசிகர்கள் தியேட்டருக்கு வர துவங்கிய பின் படத்தை வெளியிடுவோம் என விஜய் கருதுகிறாராம்.
ஆனாலும், விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில், தீபாவளியன்று மாஸ்டர் படத்தின் டீசர் வீடியோவை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Source: Vellithirai News