சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் எல்லோரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.
அமேசான் பிரைமில் எந்த திரைப்படமும் செய்யாத சாதனையை சூரரைப்போற்று நிகழ்த்தியுள்ளது. தியேட்டரில் இப்படம் வெளியாகததால் வேறு வழியின்றி அமேசான் பிரைமில் லட்சக்கணக்கானோர் இப்படத்தை பார்த்துள்ளனர். இதுவரை படம் பார்த்தவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. இவ்வளவு பார்வையாளர்களை இதுவரை எந்த திரைப்படமும் அமேசான் பிரைமில் பெற்றதில்லை எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தை பார்த்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் ‘சூரரைப்போற்றும் படம் எல்லா வகையிலும் உயரே பறக்கிறது.ஒரு கோவக்காரன் இளைஞன், ஆர்வமுள்ள இளம் தொழிலதிபர், அன்பான கணவன் என சூர்யா அனைத்து கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷின் இசை அசத்தலாக இருந்தது. ஊர்வசி மற்றும் அபர்ணா ஆகியோரின் நடிப்பும் அபாரம். சூர்யா மாறாவாகவே வாழ்ந்துள்ளார். இந்த ஆண்டுக்கான தேசிய விருது உங்களுக்கு காத்திருக்கிறது. இல்லையெனில், அதற்காக போராடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.
Source: Vellithirai News