கௌதம் கார்த்திக், யாஷிகா சோப்ரா உள்ளிட்ட சிலர் நடித்து 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் இருட்டு அறையில் முரட்டுக்குத்து. இப்படத்தை சந்தோஷ் குமார் இயக்கியிருந்தார். இப்படம் முழுவதும் ஆபாச காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஆனால், இளசுகள் கூட்டம் கூட்டமாக இப்படத்தை பார்த்தால் இப்படம் வெற்றி அடைந்தது.
தற்போது அதன் 2ம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சந்தோஷ் குமார் மற்றும் டேனியல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் தொடர்பான போஸ்டர் மற்றும் டீசர் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி கடும் கண்டனத்திற்கு உள்ளானது.
மேலும், இப்படத்தில் இடம் பெற்ற ‘பூம் பூம்’ பாடல் வரிகள் வீடியோவை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது.இந்த பாடலில் ஏகப்பட்ட இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெற்றுள்ளது. இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘தபேலா’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
[embedded content]
Source: Vellithirai News