df4407a58458eb28bd95028c188191a3 - 2026

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் எல்லோரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் வரும் அப்துல் கலாம் ஐயாவின் கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசியுள்ள பிரபல மிமிக்ரி கலைஞர் நவீன் முரளிதர் சூர்யாவின் நடிப்பை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

naveen

தனது முகநூல் பக்கத்தில் ‘இப்படத்தில் சிறு வாய்ப்பு வழங்கிய சூர்யாவுக்கு நன்றி. சூர்யாவுக்கு நடிக்க தெரியாதுன்னு சொன்னங்க. உங்களுக்கு நடிக்க தெரியலதான்.. வாழ்ந்து இருக்கீங்க’ என பதிவிட்டுள்ளார்.
Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending