தனுஷ், சாய் பல்லவி உள்ளிட்ட பலரும் நடித்த திரைப்படம் மாரி 2. இப்படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் யுடியூப்பில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இந்த பாடல் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் யுடியூப்பில் பதிவேற்றப்பட்டது. அப்போது முதலே இப்பாடலை பல லட்சம் பேர் பார்த்து ரசித்து வந்தனர். தற்போது இந்த பாடல் வீடியோ ஒரு பில்லியன் அதாவது, 100 கோடி பார்வையாளர்கள் இந்த பாடலை பார்த்து ரசித்துள்ளனர்.
தென்னிந்திய திரையுலகில் இதுவரை எந்த பாடலும் இந்த சாதனையை பெற்றதில்லை. இந்த தகவலை தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இப்பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். நடனப்புயல் பிரபுதேவா இப்பாடலுக்கு நடனம் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
[embedded content]
Source: Vellithirai News