91f442b623a5211906acc718094f4146 - 2026

குண்டாக இருந்த சிம்பு தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து சின்னப் பையன் போல் மாறி சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். 

சிம்பு கொடுத்த ஒத்துழைப்பில் 32 நாளில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தமிழ் சினிமா வரலாற்றில் சிம்பு நடித்த படம் இவ்வளவு வேகமாக முடிந்தது இதுதான் முதல் முறை. இப்படத்தின் டீசர் வீடியோ தீபாவளியன்று வெளியானது. இதில், சிம்பு துருதுருவென நடித்துள்ளார். சண்டைக்காட்சிகள் சும்மா தூள் கிளப்பியுள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனத்தெரிகிறது.

இந்நிலையில், நீரில் நின்ற படி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நீங்கள் பணிபுரிவதில் நீங்கள்தான் சிறந்த பிராஜக்ட் எனவும், அன்பு, பாசிட்டிவிட்டி, இரக்கம் அனைத்தையும் பகிருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

 
Source: Vellithirai News

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending