தமிழ் சினிமாவில் நம்பர் நடிகையாகவும், லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களாலும் அழைக்கப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. ஒருபக்கம் ஹீரோவுடன் டூயட் போடும் வேடங்களில் நடித்தாலும் மறுபக்கம் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் ஒரு படத்திற்கு ரூ.5 கோடி முதல் 6 கோடி வரை சம்பளம் பெற்று வந்தார்.
தற்போது அவர் நடித்து ஓடிடியில் வெளியான மூக்குத்தி அம்மன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், நல்ல விலைக்கு இப்படம் ஓடிடியில் விலை போயுள்ளது. இதையெல்லாம் கணக்குப்போட்ட நயன்தாரா தற்போது தனது சம்பளத்தை ரூ.10 கோடியாக உயர்த்தி விட்டாராம்.
இதனால் அவரை வைத்து படம் எடுக்க விரும்பும் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனராம்..
Source: Vellithirai News