விஜயின் 65வது திரைப்படத்தை இயக்குவதில் இருந்து முருகதாஸ் வெளியேறிய பின் விஜயின் அடுத்த படத்தை யார் இயக்கப்போகிறார் என்பதுதான் ஒன் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.
நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தையும், சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தையும் இயக்கி வரும் நெல்சன் கூறிய கதை விஜய்க்கு மிகவும் பிடித்துபோக அந்த கதையிலேயே நடிக்க விஜய் விரும்புவதாக தெரிகிறது. ஆனால், அவர் டாக்டர் படத்தை இன்னும் முடிக்கவில்லை. மேலும், விஜய்க்கான முழுக்கதையையும் தயார் செய்யவில்லை.
இந்த கேப்பில் உள்ளே புகுந்த இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா விஜயிடம் ஒரு ஒன்லைனை கூறியுள்ளார். அது விஜய்க்கு பிடித்துப்போக, நெல்சன் பிராஜக்ட் தாமதமானால் நாம் சேர்ந்து பணிபுரிவோம் என எஸ்.ஜே.சூர்யா கூறி வருகிறாராம். விஜயை வைத்து ‘குஷி’ படத்தை இயக்கி மெகா ஹிட் கொடுத்தவர் எஸ்.ஜே.சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, நெல்சனா?… எஸ்.ஜே.சூர்யாவா?…. யாரை தேர்ந்தெடுப்பது என்கிற புது குழப்பத்தில் இருக்கிறாராம் விஜய்….
Source: Vellithirai News