19f8710b9c638cb8e3a5697aa2d35ebd - 2026

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாகவும், லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் நயன்தாரா. பல வருடங்களாக தனது மார்கெட்டை இழக்காமல் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

ஆனால், வழக்கமாக அவர் தனது பிறந்தநாளை காதலர் விக்னேஷ் சிவனோடு வெளிநாடு சென்று கொண்டாடுவார். ஆனால், இந்த முறை கொரோனா தொற்று பரவல் காரணமாக கேரளாவில் ஒரு படப்பிடிப்பில் எளிமையாக கொண்டாடியுள்ளார். அதில், அவரின் குடும்பத்தினரும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.விரைவில் இது தொடர்பான புகைப்படம் வெளியாகும் எனத்தெரிகிறது.
Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending