லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவன் என்றும், அவர்தான் தனது வருங்கால கணவர் என்றும், விழா ஒன்றில் மறைமுகமாக ஒப்புக்கொண்டார்.
சென்னையில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நயன்தாரா பேசியபோது, ‘அம்மா, அப்பா, சகோதரர், என் வருங்கால கணவர் ஆகிய அனைவருக்கும் முதலில் நன்றி என்று குறிப்பிட்டார். இதன் மூலம் காதலரான விக்னேஷ் சிவனை வருங்கால கணவர் என்று நயன்தாரா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் சமீபத்தில் காதலர் தினத்தன்று இருவரும் ஒன்றாக சேர்ந்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டாடினார்கள்.
மேலும் சில நாட்களுக்கு முன்னர் இருவரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றபோது எடுக்கப்பட்ட நெருக்கமான புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது