தல அஜித், சமீபத்தில் எம்.ஐ.டிக்கு வருகை தந்திருந்தபோது அவருக்காக பலமணி நேரம் காத்திருந்த மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டார். அதில் ஒரு விஜய் ரசிகரும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை குரோம்பேட்டையிலுள்ள எம்.ஐ.டி கல்லூரியின் ஏரோ மாடலிங் துறைக்கு சொந்த வேலையாக வந்திருந்த தல அஜித்தை பார்க்க மாணவர்கள் மணிக்கணக்காக காத்திருந்தனர்.
அப்போது வேலையை முடித்துவிட்டு அஜித் வெளியே வந்தபோது, ‘ ஏரோ மாடலிங் துறையை சேர்ந்த மாணவர்கள் தாங்கள் அஜித்துக்காக 12 மணி நேரம் காத்திருப்பாதாக கூற, அதற்கு அஜித் சாரி மாணவர்களே, “உங்களை பார்க்க நான் 26 வருடமாய் காத்திருக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் கூறினார். அஜித்தின் இந்த பேச்சு மாணவர்களை ஆச்சரியப்படுத்தியது.