ஃபோர்ப்ஸ் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஆசியாவில் உள்ள 30 பிரமுகர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில் ஆசிய அளவில் புகழ் பெற்ற இளம் கண்டுபிடிப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் திரையுலகினர் இடம்பெறுவது வழக்கம்
இந்த நிலையில் தற்போது இந்த ஆண்டின் 30 பிரபலங்கள் பட்டியலை தற்போது ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் இடம்பிடித்துள்ளார்.
விராத்கோஹ்லியை திருமணம் செய்த பின்னர் அனுஷ்கா பாலிவுட்டின் உச்சத்தை தொட்டுள்ளார் என்றும், அதேபோல் அனுஷ்காவை திருமணம் செய்ததால் விராத் கோஹ்லி வெற்றிகளை குவித்து வருவதாகவும் ஃபோர்ப்ஸ் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளது. இருவரும் அவரவர் துறையில் இந்த ஆண்டு தொடர்ந்து உச்சத்தில் இருப்பார்கள் என்றும் ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.
அனுஷ்கா சர்மா, ஃபோர்ப்ஸ், ஆசியா, விராத் கோஹ்லி