நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார். சூப்பர் ஸ்டாரின் நாற்காலி மீது எனக்கு ஆசை உள்ளது. என்னுடைய அடுத்த படம் நிச்சயம் என்னை அந்த இடத்திற்கு கொண்டு போகும் என்று மார்தட்டிக் கொண்டிருந்தார் அஜித். ஆஞ்சநேயா படம் வெளியாக இருந்த நேரத்தில் தான் அஜித் இந்த பேட்டியை அளித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த இந்த படம் அவருக்கு கைக்கொடுக்கவில்லை. அதனால் ரசிகர்களால் கடும் விமர்சனத்திற்கு ஆளானார். வாரபத்திரிக்கைகளிலும் வாய்கொழுப்பு நடிகர் என்று பெயர் வாங்கினார். அதன்பிறகு உஷாரான அஜித் பேட்டியளிப்பது, விழாக்களில் கலந்து கொள்வது என அனைத்தையும் நிறுத்தி விட்டார். இப்போது அமைதியின் மறுஉருவமாக மாறிவிட்டார். இருப்பினும் தான் பேட்டியளிக்காவிட்டாலும் தன்னை பற்றி யாராவது பேசிக்கொண்டே இருந்தால்தானே சினிமாவில் தனக்கான மார்க்கெட்டை நிலையாக வைத்து கொள்ள முடியும். அஜித் நடிக்கும் படங்களில் தன்னுடன் நடிக்கும் நடிகர், நடிகைகளை தேர்வு செய்வதில் ஒரு புது பார்முலாவை கொண்டு வந்தார். அதாவது, சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடிக்க போராடும் நடிகர்கள், மார்க்கெட் போகும் நிலையில் இருக்கும் நடிகைகளை தேர்வு செய்வார். காரணம், யாரும் கரம் கொடுக்காமல் இருந்த தனக்கு ஒருவர் உதவி செய்தால் அவரை பற்றி புகழ்ந்துதான் பேசுவார்கள். இதுதானே மனிதனின் இயல்பு. உதாரணம், வீரம் படத்தில் அஜித்தின் தம்பிகளாக நடித்த நடிகர்கள், என்னை அறிந்தால் படத்தில் நடித்த த்ரிஷா. என்னை அறிந்தால் படத்திற்கு முன்பு த்ரிஷாவின் மார்க்கெட் சொல்லும்படி இல்லை. இவரை எந்த முன்னணி நடிகர்களும் ஒப்பந்தம் செய்யவில்லை. இந்த நேரத்தில் அஜித் தன்னுடைய படத்தில் நடிக்க அழைத்தால் எப்படியிருக்கும்… அதே போல் அனைத்து திறமைகளுக்கும் இருந்தும் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் போராடி கொண்டிருந்தார் அருண் விஜய். அவரையும் என்னை அறிந்தால் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க வைத்து அவரின் மூலம் அஜித் புகழ் பெற்றார். இதுபோன்று பல உதாரணங்கள் சொல்லலாம்…
அஜித்தின் புது பார்முலா: நடிகர்கள், தல புகழ் பாடுவதற்கு இதுதான் காரணமா?
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari