நிரஞ்சனா புரெடக்சன்ஸ் ‘தப்பா யோசிக்காதீங்க’ எனும் புதிய திரைப்படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படம் காலை 7.00 மணிக்கு படப்பிடிப்பு துவங்கி மாலை 6.00 மணியளவில் இயக்கி முடிக்கக் கூடிய 11 மணி நேரத்தில் எடுக்கப்படும் முதல் இந்திய தமிழ் திரைப்படம். கதை சுருக்கம் இன்றைய வாழ்க்கை சூழலில் ஒரு மனிதன் தற்காலிக பணியிடை நீக்கத்தில் இருந்தால், அந்த குடும்பத்தினால் அவனுக்கு ஏற்படும் அவலங்கள் என்ன? அந்த மனிதன் பொருளாதார ரீதியில் தனிமை படுத்தும் போது இந்நிலையில் அவனுக்கு ஏற்படும் இன்னல்களை எப்படி கையாள்கிறான் என்பதை மிக தெளிவாக இத்திரைப்படம் விளக்கும். இப்படத்தின் புதுமுக அறிமுக கதாநாயகன் ராஜா, கதாநாயகியாக ஜோதிஷா, சனிலா, மற்றும் சிசர் மனோகர், மகி, பேபி நட்சத்திரம் மோனிகா மற்றும் பல முக்கிய 46 கதாபாத்திரங்கள் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தில் இரண்டு பாடல்களை இசையமைப்பாளர் ஸ்டீபன் சதீஷ் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு சென்னையில் ஒரு வீட்டில் படமாக்கப்பட்டு 11 மணி நேரத்தில் முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப கலைஞர்கள் எழுத்து – இயக்கம் – சுல்தான்ஸ் ஒளிப்பதிவு – S.R. வெற்றி இசை – ஸ்டீபன் சதீஷ் கலை – சுரா தயாரிப்பு நிர்வாகம் – O.K. குமார் மக்கள் தொடர்பு – S. செல்வரகு தயாரிப்பாளர்: G. அனில்குமார்
To Read this news article in other Bharathiya Languages
11 மணி நேரத்தில் எடுக்கப்படும் முதல் தமிழ்ப்படம் “தப்பா யோசிக்காதீங்க”
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari