11 மணி நேரத்தில் எடுக்கப்படும் முதல் தமிழ்ப்படம் “தப்பா யோசிக்காதீங்க”

Published:

thappa-yosikkathinga நிரஞ்சனா புரெடக்சன்ஸ் ‘தப்பா யோசிக்காதீங்க’ எனும் புதிய திரைப்படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படம் காலை 7.00 மணிக்கு படப்பிடிப்பு துவங்கி மாலை 6.00 மணியளவில் இயக்கி முடிக்கக் கூடிய 11 மணி நேரத்தில் எடுக்கப்படும் முதல் இந்திய தமிழ் திரைப்படம். கதை சுருக்கம் இன்றைய வாழ்க்கை சூழலில் ஒரு மனிதன் தற்காலிக பணியிடை நீக்கத்தில் இருந்தால், அந்த குடும்பத்தினால் அவனுக்கு ஏற்படும் அவலங்கள் என்ன? அந்த மனிதன் பொருளாதார ரீதியில் தனிமை படுத்தும் போது இந்நிலையில் அவனுக்கு ஏற்படும் இன்னல்களை எப்படி கையாள்கிறான் என்பதை மிக தெளிவாக இத்திரைப்படம் விளக்கும். இப்படத்தின் புதுமுக அறிமுக கதாநாயகன் ராஜா, கதாநாயகியாக ஜோதிஷா, சனிலா, மற்றும் சிசர் மனோகர், மகி, பேபி நட்சத்திரம் மோனிகா மற்றும் பல முக்கிய 46 கதாபாத்திரங்கள் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தில் இரண்டு பாடல்களை இசையமைப்பாளர் ஸ்டீபன் சதீஷ் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு சென்னையில் ஒரு வீட்டில் படமாக்கப்பட்டு 11 மணி நேரத்தில் முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப கலைஞர்கள் எழுத்து – இயக்கம் – சுல்தான்ஸ் ஒளிப்பதிவு – S.R. வெற்றி இசை – ஸ்டீபன் சதீஷ் கலை – சுரா தயாரிப்பு நிர்வாகம் – O.K. குமார் மக்கள் தொடர்பு – S. செல்வரகு தயாரிப்பாளர்: G. அனில்குமார்

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img