இன்று தொடங்குகிறது சைமா திரைப்பட விழா

2018ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விழா இன்றும், நாளையும் துபாயில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சைமா என்றழைக்கப்படும், தென்னிந்திய சர்வதேச திரைப்பட விழா கடந்த 6 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 2017ம் ஆண்டு வெளியான படங்களிலிலிருந்து சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

இந்நிலையில், 2018ஆம் ஆண்டுக்கான 7வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விழா அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் விழா ஒருங்கிணைப்பாளர் பிருந்தா பிரசாத், நடிகர் ராணா, நடிகைகள் அஞ்சலி, ரைசா, குஷ்பு, நிக்கி கல்ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், 2018ஆம் ஆண்டின் சிறந்த குறும்படங்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் சிறந்த குறும்படமாக திறந்த புத்தகம் என்ற படமும், சிறந்த இயக்குனராக ஆதித்யா அன்பு (தி பிரேக்-அப்), தேர்ந்தெடுக்கப்பட்டனர்.