Month: June 2018

  • ஜூன் 21- சர்வதேச யோகா தினம்

    பன்னாட்டு யோகா நாள் (International Yoga Day) ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் நாள் கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐநா பொதுச்சபையில் கடந்த 2014 செப்டம்பர் 27ம் தேதி வலியுறுத்தி உரையாற்றியிருந்தார். ஜூன்…

  • பாரத பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுடன் காணொளி மூலம் நேரடி கலந்துரையாடல்

    இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுடன் இந்திய முழுவதுமுள்ள விவசாயிகளுடன் பொதுசேவை மையம் மூலம் காணொளி கலந்துரையாடல் நடத்தினார் ,இதில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டார்இதில் சேமிப்பு, பட்ஜெட், வங்கி கணக்கின் முக்கியத்துவம், காப்பீடு, அரசு திட்டம், மூலதன சந்தைகள் போன்றவற்றிற்கு விளக்கம் அளிக்கப்பட்டது

  • எஸ்.வி.சேகருக்கு ஜாமின்! ஜூலை 18ல் ஆஜராக உத்தரவு!

    சென்னை: பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்த ஒருவரின் கருத்தை பேஸ்புக்கில் பார்வர்ட் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் எஸ்வி சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.

  • தமிழக அரசியல் சூழல் குறித்து கமலுடன் பேச்சு: ராகுல்

    காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தொடர்பாகவும் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் கமல்ஹாசனிடம் பேசினேன் என்று கூறினார் ராகுல் காந்தி.

  • சேலம் 8 வழிச் சாலைக்கு எதிராக போராட்டம்! அறிவித்தார் சீமான்!

    சேலம்- சென்னை 8 வழி சாலை திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

  • விஜய் அடிமையான வீடியோ கேம் இதுதான்

    இளையதளபதி விஜய் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் முன்பெல்லாம் அமைதியாக ஏதாவது யோசித்து கொண்டிருப்பார் என்று படக்குழுவினர் கூறுவதுண்டு. ஆனால் இப்போது ஓய்வு நேரத்தில் ஒரு வீடியோ கேமை விளையாடி வருவதாகவும், அந்த கேமிற்கு விஜய் அடிமையாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. விஜய்யை அடிமைப்படுத்திய அந்த வீடியோ கேம் ‘Flight Simulator’ என்ற மொபைல் வீடியோ கேம் என்பதும் இந்த கேம் உலகம் முழுவதும் பல மில்லியன் பேர்களால் விரும்பி விளையாடப்படும் ஒரு கேம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும்…

  • சீமராஜா’ படக்குழுவினர்களுக்கு பிரிவு உபச்சார விழா

    பொதுவாக ஒரு படத்தின் படப்பிடிப்பு முடியும் நாளில் சிறிய பூஜை மட்டும் நடத்தி படக்குழுவினர்களுக்கு நன்றி சொல்வது மட்டுமே கோலிவுட் திரையுலகில் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘சீமராஜா’ படத்தின் தயாரிப்பாளர் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதை அடுத்து ஒரு பிரிவு உபச்சார விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளார். நேற்று நடைபெற்ற இந்த விழாவில் சிவகார்த்திகேயன், சூரி உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வந்த படப்பிடிப்பிற்கு நன்றி கூறும்…

  • அருண்விஜய் படத்தில் நடிக்க மறுத்த விஜய்!

    இளையதளபதி விஜய்யின் கால்ஷீட்டை பெற முயற்சி செய்து ஏமாற்றம் அடைந்த பல கோலிவுட் திரையுலகினர்களில் அருண்விஜய்யும் ஒருவர் என்பது சமீபத்தில் தெரிய வந்துள்ளது. நடிகர் அருண்விஜய் கடந்த சில வருடங்களுக்கு முன் சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்து அதில் நடிக்க விஜய்யிடம் கால்ஷீட் கேட்டதாகவும், ஆனால் அந்த படத்தில் நடிக்க விஜய் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது தயாரிப்பு என்பது ரிஸ்க்கான தொழில் என்றும், அவசரப்பட்டு தயாரிப்பு தொழிலில் ஈடுபட வேண்டாம் என்றும், தொடர்ந்து முயற்சி செய்தால்…

  • லாரி வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும் – ஸ்டாலின்

    லாரி வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் லாரி உரிமையாளர்களை உடனடியாக அழைத்து பேசி, பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் மத்திய அரசை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தினசரி டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அகில இந்திய தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் நேற்று முன்தினம் முதல் நாடு…

  • மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதல்வர் அறிவிப்பு

    மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற உத்தரவை, தமிழக சுகாதார துறைக்கு, மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், எய்ம்ஸ் மருத்துவமனை, 200 ஏக்கரில் மதுரையில் தோப்பூர் என்ற இடத்தில் அமைய உள்ளது. 750 படுக்கை வசதிகள் கொண்ட நவீன மருத்துவமனை அமைய உள்ளது. இங்கு 100 எம்பிபிஎஸ் இடங்கள் உருவாக்கப்படும். 60 நர்ஸ் பயிற்சி படிக்கும் வசதி உருவாக்கப்படும் 1,500 கோடி…