ஜூன் 21- சர்வதேச யோகா தினம்

Published:

11 June20 yoga day - 2026பன்னாட்டு யோகா நாள் (International Yoga Day) ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் நாள் கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐநா பொதுச்சபையில் கடந்த 2014 செப்டம்பர் 27ம் தேதி வலியுறுத்தி உரையாற்றியிருந்தார். ஜூன் 21 ஆம் நாளை அவர் இதற்காகப் பரிந்துரைத்திருந்தார். அமெரிக்கா, கனடா, சீனா உட்படப் பல உலக நாடுகள் நரேந்திர மோதியின் பரிந்துரையை ஆதரித்தன. கடந்த 2014 டிசம்பர் 11ம் தேதி 193-உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஜூன் 21 ஆம் நாளை ‘பன்னாட்டு யோகா நாளாக’ அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.முதல்முறையாக கடந்த 2015 ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக இந்தியத் தலைநகர் டெல்லியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தலைமை வகித்தார்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

Related articles

Recent articles

spot_img