ஜூன் 1 – பன்னாட்டு குழந்தைகள் நாள்

உலகம் சற்றுமுன் பொது தகவல்கள்

09 May31 childrens day - 2026குழந்தைகள் நாள் (Children’s Day) உலகின் பல நாடுகளில் ஆண்டுதோறும் வெவ்வேறு நாட்களில் விடுமுறை நாளாகவும் சிறப்பு நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

குழந்தைகள் தின விழாவானது 1856 ஆம் ஆண்டு ஜூன் அன்று சார்லஸ் லியோனர்டு என்ற பாதிரியாரால் தொடங்கப்பட்டது ஆகும். அவர் குழந்தைகளுக்கு சிறப்பான சேவை செய்வதற்கான ஒரு நாளை ஏற்படுத்தினார். தொடக்கத்தில் அதற்கு பூக்கள் ஞாயிறு என பெயர் இருந்தது பின்னர் குழந்தைகள் நாள் என ஆனது.

அனைத்துலக குழந்தைகள் நாள் டிசம்பர் 14, 1954 இலிருந்து, ஐக்கிய நாடுகள் மற்றும் யுனிசெஃப் அமைப்புகள் ஆண்டு தோறும் நவம்பர் 20 அன்று கொண்டாடுகின்றன. உலகெங்கணும் உள்ள குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக இந்நாள் ஐநா அவையினால் பிரகடனப்படுத்தப்பட்டது .அத்துடன் குழந்தைகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான பல பொதுநலத் திட்டங்களை உலகெங்கும் நடத்துவதற்கும் இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ALSO READ:  குருவாயூர் ஏகாதசி: லட்ச தீப ஒளியில் ஜொலித்த ஸ்ரீ கிருஷ்ணன் கோயில்!

உலக சிறுவர் தினமும் முதியோர் தினமும் இலங்கையில் ஒரே தினத்தில் கொண்டாடப்படுகின்றன.

Posts by ரேவ்ஸ்ரீ:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =