
பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த போதே மாரடைப்பால் மரணமடைந்த பள்ளி ஆசிரியர் குறித்து பலரும் தங்கள் பரிதாப உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த போது, மாணவர்களின் கண் முன்பேயே ஆசிரியர் மாரடைப்பால் மயங்கிச் சரிந்து மரணத்தின் கொடூரத்தை மாணவர்களுக்குக் காட்டியிருக்கிறார்.
இந்த சம்பவம் தெலங்காணா மாநிலம் மெகபூபாபாத் மாவட்டத்தில் நடந்துள்ளது. விஜய் சிங் என்ற பள்ளி ஆசிரியர் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு நாற்காலியில் அமர்ந்து சாய்ந்து விட்டார்.
மாணவர்கள் அதிர்ந்து போயினர். ஓடிச் சென்று பிற ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்க்கையிலேயே அவர் இறந்திருந்தது தெரியவந்தது.
விஜய்சிங் மகபூபாபாத் மாவட்டம் தொர்ரூரு மண்டலம் எஸ்சி காலனி பாடசாலையில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவர் மரணமடைந்த செய்தியை அவருடைய குடும்பத்தினருக்கு தெரிவித்தனர்.
தமக்கு வகுப்பு எடுத்த ஆசிரியர் இனி இல்லை என்பதை மாணவர்களால் நம்ப இயலவில்லை. அவர்கள் கண்ணீர் விட்டுக் கதறியது அங்கிருந்தவர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.