
வரகு அரிசி புளியோதரை
தேவையான பொருட்கள்
வரகு அரிசி – ஒரு கப்
தனியா – 1 ஸ்பூன்
எள்ளு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
புளி – சிறிதளவு
வேர்க்கடலை – 50 கிராம்
கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 2 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
வெல்லம் – சிறிதளவு
மஞ்சள்தூள் – ஒரு ஸ்பூன்
எண்ணெய் –தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு .

செய்முறை
வரகரிசியை 10 சிறிது நேரம் ஊற வைத்து கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். நன்கு ஊறியவுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.சிறிதளவு புளியை ஊறவைத்துக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் தனியா, எள், வெந்தயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றைத் தனித்தனியே வறுத்து ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பின் ஊறவைத்துள்ள புளியைக் கரைத்து வடிகட்டி தாளிப்பில் ஊற்றவும்.
பின்னர் அதில் மஞ்சள்தூள், உப்பு, வெல்லம் சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு, அரைத்து வைத்திருக்கும் பொடியை சேர்த்துக் கிளறி, எண்ணெய் நன்கு பிரிந்து வரும்போது இறக்கி அதில் தேவையான அளவு சாதத்தை கலந்து பரிமாறினால் சுவையான வரகு அரிசி புளியோதரை ரெடி.