
தமிழகத்தில் மேலும் 5,684 பேருக்கு இன்று சீன வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2,79,140 ஆக உயர்ந்துள்ளது
தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 110 பேர் இன்று உயிரிழந்துள்ளனர் இதையடுத்து தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு 4,571 ஆக அதிகரித்துள்ளது
இன்று அரசு மருத்துவமனையில் 88 பேரும் தனியார் மருத்துவமனையில் 22 பெரும் உயிரிழந்தனர்
சென்னையில் மேலும் 1,091 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1.06 லட்சம் ஆக அதிகரித்துள்ளது
சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,593 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் ரூ.103 கோடியில் 500 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட உள்ளன இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தெரிவித்தார்.
கொரோனா உயிரிழப்பை குறைக்க 12 விதமான சிகிச்சை முறை செயல்படுத்த படுவதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார் மேலும் கொரோனா பரிசோதனை முடிவுகள் குறித்த தகவலை உடனடியாக அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்தார்
மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விபரம்
