
ரயில் பயணங்களில் லோயர் பெர்த் அளிக்கும் சுகம் !
தூரத்திலுள்ள இடங்களுக்கு இரயில் பயணம் மேற்கொள்வோர் – குறிப்பாக அப்பர் பெர்த்தில் பயணம் செய்வோர் கால் வலி, முட்டி வலி உள்ள ஐம்பதுவயதிற்கு மேற்பட்டவர் என்றால்
லோயர் பர்த் கிடைத்துள்ளோரிடம் “உங்களால் முடிந்தால் அப்பர் பெர்த்க்கு செல்ல முடியுமா? என்னால் மேல் பெர்த் ஏறுவது சிரமம். சிரமத்திற்கு மன்னிக்கவும் ” என்று அவ்வப்போது வினவுவதை பார்க்கிறோம்.
ஆனால், பதிவு மேற்கொண்ட நேரத்திலேயே லோவ்ர் பெர்த் கிடைத்தோர் ஒருவிதத்தில் அதிர்ஷ்டசாலிகள் போல. எப்போதும் கீழ் படுக்கையைத் தேர்ந்தெடுப்பவர்கள், அவர்கள் தூங்குவதற்காக பெறு ம் வசதியை விட முக்கியமான வேறொரு விஷயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம் என்று உளவியல் கூறுகிறது. அதாவது, அவர்களின் தனிப்பட்ட உட்காரும் / படுத்துக்கொள்ளும் இடத்தின் மீதான கட்டுப்பாடு, சுதந்திரமாக நடமாடுதல் மற்றும் எப்போது உட்கார வேண்டும், தூங்க வேண்டும் அல்லது மற்றவர்களுடன் உரையாட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் திறன்தான் அது..
அடிக்கடி ரயில்பயணம் மேற்கொள்வோரிடம் அவர்களின் விருப்பமான படுக்கை எது என்று கேட்டால், பலர் தரையிலிருந்து மிக அருகிலுள்ள லோயர் படுக்கை என்று கூறுவார்கள். அது மிகவும் அகலமான அல்லது நீளமான படுக்கை என்று கூற முடியாது. ஏன் எனில், காலை நன்கு நீட்டினாள் போவோர் வருவோர் எல்லாம் காலை படார் என்று இடி இடித்துக்கொண்டு செல்வர். சில சமயங்க ளில் வேறு பெர்த் காரர்கள் நம் அனுமதி பெறாமலேயே நம் அருகே தரையில் செய்த்தித்தாள்களை பரப்பி கொர் கொர் சப்தம் எழுப்பி நம்மைத் தூங்கவிடாத அனுபவங்களும் உண்டு. .
ஆனாலும் எனோ தெரியவில்லை – லோயர் பெர்த் அதிகம் விரும்பப்படும் படுக்கைகளில் ஒன்றாக இன்றளவும் திகழ்கிறது. ஓடுவது போல தோற்றமளிக்கும் மரங்கள், வழிகாட்டிகள், வண்டி நிற்காத ஸ்டேஷன் பெயர்கள் பார்த்தல் இவற்றிக்கெல்லாம் ஜன்னல் உதவுகிறது. அன்றாடச் செயல்பாட்டில் பார்த்தால் கூட, “எதிர் பெர்த் காலியாக இருந்தால், காலை நீட்டி உட்கார்ந்து ஜன்னல் வழியே இயற்கைகாட்சிகளைக் காணும் பொழுதுபோக்குக்கு ஈடு இணை ஏதும் கிடையாது” என்கிறார் எனது நண்பர் ஒருவர்.
கூல் ஆன நடைபாதை மற்றும் பகலில் நிமிர்ந்து உட்காரும் சுதந்திரம் ஆகியவை மேலும் சில அனுகூலங்கள். இப்படியே உணர்வுகளுடன், இவை அனைத்துக்கும் மேல், “இந்த லோயர் பெர்த் ஆசைக்குப் பின்னால் ஆழமான ஏதோ ஒன்று இருக்கலாம் என்று கூறுகின்றனர்: அது என்ன? “எப்போது உட்கார வேண்டும், தூங்க வேண்டும் அல்லது பேச வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் விருப்பம்தான் அது”.
உளவியலாளர் டேனியல் ஸ்டோகோல்ஸின் 1970-களின் ஒரு புகழ்பெற்ற கட்டுரை, அடர்த்திக்கும் நெரிசலுக்கும் இடையே ஒரு பயனுள்ள தொடர்பை வரைகிறது. அடர்த்தி என்பது வெறுமனே இடமின்மை. அவ்வளவே. அதேசமயம் நெரிசல் என்பது ஒரு நபர் விரும்பும் அளவிற்கு தனியுரிமை குறையும்போது உணரப்படும் ஒரு அனுபவமாகும். எடுத்துக்காட்டாக, ஒரே பேருந்தில் உள்ள இரண்டு பயணிகள் பயணிக்கும்போது பேருந்தில் காணும் கூட்டத்தைப் பற்றி இப்படி மிகவும் வித்தியாசமாக உணர்வை கவனிக்கக்கூடும். இல்லையா?
உளவியலாளர்கள் மற்றும் சீர்திருத்த அதிகாரிகளால் நெரிசல் பற்றிய ஆய்வை மேற்கொண்ட பின்னர் அமெரிக்க நீதித் துறையின் நீதித் திட்டங்களுக்கான அலுவலகம் மூலம் கிடைக்கும் ஒரு அறிக்கை கூறுவது இதுதான்: “நெரிசலை அதிக மக்கள் அடர்த்தியுடன் சில நேரங்களில் ஏற்படும் உயர் உளவியல் மன அழுத்தத்தின் ஒரு நிலையாக விவரிக்கிறது. மேலும், நெரிசலுக்கு ஆளாகும் காலம் எவ்வளவு நேரம் மற்றும் அது எவ்வளவு கணிக்கக்கூடியது,
அந்த நேரத்தில் ஒரு நபர் எவ்வளவு சமூகத் தொடர்பை விரும்புகிறார், மற்றும் கட்டுப்பாட்டைப் பற்றிய அவர்களின் பார்வை உள்ளிட்ட இதில் சம்பந்தப்பட்ட காரணிகளையும் பட்டியலிடுகிறது. நெரிசல் பற்றி முன்பே தெரிவிக்கப்பட்டவர்கள் மிகவும் சௌகரியமாக உணர்ந்தனர் என்பதையும் இது குறிப்பிடுகிறது. ஆனால், இந்த அறிக்கை சிறைச்சாலைகளைப் பற்றிய ஒரு பார்வை. ரயில் மற்றும் அதில் பயணம் செய்வோர். எனவே இந்த ஆய்வு கட்டுப்பாடு என்ற கருத்தை ஒரு பொதுவான வழியில் மட்டுமே ஆதரிக்கிறது.
ஒவ்வொரு கண்டுபிடிப்பும் உறுதியானதொரு முடிவை கூற முடியாவிடினும், அயோவா மாநிலப் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வறிக்கை, உணரப்பட்ட கட்டுப்பாடு என்பது வரையறுக்கப்பட்ட சூழ்நிலைகளில் மட்டுமே நெரிசல் உணர்வைக் குறைப்பதாகக் கண்டறிந்தது. ரயில் போன்றவற்றில் லோயர் பெர்த் படுக்கையை விரும்பும் பலர் வெறுமனே ஜன்னல் அருகே உட்கார்ந்து வெளி உலகத்தை ரசிப்பதை விரும்பலாம், அல்லது அந்தப் படுக்கையில் ஏறி அமர்வது எளிதாக இருப்பதாகக் கருதலாம்.
ஆய்வுகள் ஒரு புறம் இருக்கட்டும், நம்மில் சிலருக்கு, பக்கவாட்டு அல்லது லோயர் பெர்த் கீழ் படுக்கை என்பது சௌகரியத்தை விட, நம்மூருக்குச் சென்றடையும் வரை அரட்டை அடிப்பது, அவ்வப்போது(இரவு மணி இரண்டாயினும்) குழு உறுப்பினர்களுடன் சத்தம் போட்டுப் பேசிக்கொண்டே எதையாவது கொரிப்பது, குழந்தைகள் / வயதானவர்கள் தூங்கும் நேரம் ஆயிற்றே என்பதை மறந்து ஹா ஹா என்று சிரித்து அவர்கள் மனங்களை நோகடிப்பது, நினைத்த நேரத்தில் இரயில் கோச் கதவருகே நின்று வேடிக்கை பார்ப்பது, போன்ற ட்ரெண்டிங் விருப்பங்களை தேர்ந்தெடுப்பதை உளவியல் பக்கங்களில் காண முடிகிறதா?
- ஆர் கே


