
சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் நவம்பர் 6 மாலை 5 மணிக்கு “ஸ்ரீ சித்திரை ஆட்டத் திருநாள்” என்ற ஒரு சிறப்பு பூஜைக்காக திறக்கப்படுகிறது.
மறுநாள் 07.11.2026 அன்று சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மன்னர் ஸ்ரீ சித்திரை ஆட்டத் திருநாள் சிறப்பு பூஜை வழிபாடுகள் நாள் முழுவதும் நடைபெறுகிறது. அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்து கணபதி ஹோமம் நிர்மால்ய தரிசனம் நெய்யபிஷேகம், உஷ பூஜை, உச்சி பூஜை இரவு படி பூஜை உட்பட பல்வேறு பூஜை வழிபாடுகள் நடைபெறும். அன்று இரவே மீண்டும் நடை அடைக்கப்படும்.
ஸ்ரீ சித்திரை திருநாள் பாலராம வர்மா, திருவிதாங்கூரின் கடைசி மன்னர். அவரது பிறந்தநாளை ஒட்டித்தான் இந்தச் சிறப்புத் திறப்பு நடைபெறுகிறது.
மண்டல பூஜை
அடுத்து மண்டல பூஜை காலம் நவம்பர் 16 மாலை 5 மணிக்கு திறக்கப்படும். நவ 17 முதல் 27.12.2026 வரை மண்டல பூஜை வழிபாடு சபரிமலை சுவாமி ஐயப்பனுக்கு நடைபெறும். மீண்டும் மகர விளக்கு பூஜைக்கு 30.12.2026 முதல் 20.01.2027 வரை திறக்கப் படும்.
மகர விளக்கு நாள் 14.01.2027.
யாத்திரை டிக்கெட் ஆன்லைன் துவக்கம்!
சபரிமலை யாத்திரை டிக்கெட் மண்டல, மகர விளக்கு பூஜை கால ஆன்லைன் புக்கிங் 29.10.2026 இன்று தொடங்கி உள்ளது. மெய் நிகர் வரிசையில் புக்கிங் செய்ய முடியும்,
ஒரு நாளைக்கு ஆன்லைன் மற்றும் ஸ்பாட் புக்கிங் சேர்த்து 80000 பேருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி தரிசனம் பண்ணலாம். ஆதார் கார்டு அவசியம்.
ஆன்லைன் புக்கிங் செய்ய வெப்சைட் : https://sabarimalaonline.org
ஆன்லைன் புக்கிங் வழி தடம் ஒரு நாளைக்கு – நிலக்கல் பாதை 60000, எருமேலி வன பாதை 3000, வண்டிபெரியார் வன பாதை 3000 ஆகும்.
பம்பையில் ஸ்பாட் புக்கிங் இல்லை, கடந்த ஆண்டை போல, ஸ்பாட் புக்கிங் கீழ்க்காணும் இடங்களில் மட்டும் உண்டு. ஒரு நாளைக்கு நிலக்கல் – 10000, எருமேலி 2000, வண்டி பெரியார் 2000 என்ற எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.


