tenkasi new collector and sp - 2026

தென்காசி மாவட்டத்துக்கு புதிய ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்!

நெல்லை சற்றுமுன் பொது தகவல்கள்
tenkasi new collector and sp - 2026

தென்காசி மாவட்டத்தின் 8-வது ஆட்சியராக மோனிகா ராணா ஐஏஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

தென்காசி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக டாக்டர் மோனிகா ராணா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தென்காசி மாவட்டம் உருவானதில் இருந்து அதன் நிர்வாகத் தலைமைப் பொறுப்பை ஏற்கும் முதல் பெண் மாவட்ட ஆட்சியர் என்ற வரலாற்றுப் பெருமையை அவர் பெற்றுள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற உத்தரவின்படி, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளராகப் பணியாற்றி வந்த டாக்டர் மோனிகா ராணா ஐஏஎஸ், தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை தென்காசி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த ரஞ்சித் சிங் ஐஏஎஸ் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக மோனிகா ராணா நியமிக்கப்பட்டுள்ளார். 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவர், நிர்வாகப் பணிகளில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்.


புதிய காவல் கண்காணிப்பாளர்:

தென்காசி மாவட்டத்தின் 8-வது ஆட்சியராக மோனிகா ராணா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்ட நிலையில் தென்காசி மாவட்ட எஸ்பியாக இருந்த அசோக்குமார் மதுரை பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி யாக மாற்றப்பட்டு தற்போது டாக்டர் ஸ்டாலின் தென்காசி மாவட்ட புதிய எஸ் பி யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் எஸ்பியாக இருந்து மாவட்டத்தில் பல சீர்திருத்தப் பணிகளையும் சட்டம் ஒழுங்கு பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டவர் ஸ்டாலின் ஐபிஎஸ். இவர் ஏற்கெனவே காரைக்குடியில் பணிபுரிந்தவர். கோயம்புத்தூரிலும் பணிபுரிந்தவர். கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்பியாக பணிபுரிந்து மிகச் சிறப்பாக பாராட்டுகளை பெற்றார்.

தற்போது, தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம பொருள் அதிக அளவில் கடத்தப்படுகிறது இதை கட்டுப்படுத்தவே அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக மக்களிடம் பேச்சு எழுந்துள்ளது. குமரியில் சுமார் 20 மாதங்கள் அவர் பணியாற்றிய காலம் மறக்க முடியாதது. கனிமவள கொள்ளை தடுப்பு, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, சாலை விபத்துகளை குறைத்தது, ரவுடிகள் மீது அதிரடி நடவடிக்கை என ஒவ்வொரு விஷயத்திலும் தனி முத்திரை பதித்தவர்.