ஆ.. தீபா… காட்டிய புது வழி…!

Published:

deepa madhavan - 2026

ஜெ பேரைச் சொல்லி அவனவன் அரசியல் பண்ணும் போது, என் அத்தை ’ஜெ’ பேர சொல்லி நான் செய்யக் கூடாதா என்று களத்தில் குதித்த தீபா இப்போ, நல்லாவே வருமானம் பார்த்துவிட்டார் என்று காதைக் கடிக்கிறார்கள்!

ஜெ.தீபா இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி என்று அறிவித்தார். இப்படி அறிவித்து… போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் மனு செய்யலாம் என்று சொல்லி 160 பேரிடம் விருப்பமனு வாங்குனாங்களாம்.

ஒரு மனுவுக்கு ஆண்களுக்கு 5000 ரூபாய், பெண்களுக்கு 2000 ரூபாய் கட்டணம் என்று சலுகை வேறு கொடுத்திருக்காங்க! அதன்படி நிறையப் பேரு மனு செய்ய… எல்லா மனுவையும் வாங்கிட்டு பரிசீலிக்கிறதா சீன் போட்டாங்களாம்!

அதுக்கு ஏத்தா மாதிரி… தனித்துப் போட்டி என்று சொல்லிக் கொண்டே வந்தவர், திடீரென்று அதிமுகவிற்கு ஆதரவு என்று சொல்லி, கடையை சாத்திட்டாங்களாம்!

இப்படி இந்த பத்துநாள்ல கிட்டத்தட்ட ஏழு லட்சம் வருமானம் பார்த்துட்டாங்கன்னு ஒரு பேச்சு..! அடடே..! அரசியல்!

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Related articles

Recent articles

spot_img