மோடி கைய வெச்சா… அது ராங்கா போறதுல்ல…! மாஸ் காட்டும் பிரசாரப் பாடல்!

Reporters Diary அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

modi superb - 2026

நாடாளுமன்றத் தேர்தல் சூடுபிடித்துள்ளது. இந்த நேரத்தில், பிரசாரத்தில் பல கட்சிகளும் தீவிரமாக இயங்கி வருகின்றன.

இந்த நேரத்தில், தேசியக் கட்சியான பாஜக.,வும் தமிழகத்தில் கால் பதிக்க, இப்போது திராவிடக் கட்சிகளின் பாணியைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறது.

திராவிடக் கட்சிகளின் பாணியில் இப்போது டப் செய்யப் பட்ட சினிமா பாடல்கள் தூள் பறக்கின்றன. கமல்ஹாசன் நடித்து பெரும் வெற்றி பெற்ற ராஜா கைய வெச்சா ராங்கா போறதில்லை… என்ற பாடலை டப் செய்து மோடி கைய வெச்சா அது ராங்கா போறதில்லை என்று வரிகளை அமைத்திருக்கிறார்கள்.

தல மோடி மீண்டும் வந்தா.. என்று வளர்ச்சித் திட்டங்கள் பற்றி பாடலில் கூறப் பட்டுள்ளது.

மோடி பத்தி யாருன்னு உலகக் கேளு..

தூய்மை இந்தியா… மேக் இண்டியா என்று திட்டங்களின் தொடர்ச்சி…

ஜல்லிக்கட்டை மீண்டும் தொடங்கி காவேரிப் பிரச்னை தீர்த்து மோடி அரசின் சாதனை என்று உலகைக் கேளு என்று பாடல் ஒலிக்கிறது.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

மாஸு என்றாலும் சாய்ஸும் என்றாலும் நம்ம மோடிதான் என்று பாடல் கலகலக்கிறது.

அந்தப் பாடலின் ஒலிவடிவம் இது….

அடுத்து இன்னொரு பாடல்… ராக் … ராக்… ராக்கம்மா கையத் தட்டு மெட்டில்..

மோடிக்கு ஓட்டு போடு.. இது ஓட்டுக் கூவால்… நாட்டுக்காக என்று வலம் வரும் பிரசாரப் பாடல்!

இந்தப் பாடல்கள் எல்லாம் முப்பது வருடங்களுக்கு முந்தைய ஹிட் பாடல்கள். இன்றைய நவீன வாக்காளன் புதிய பாடல்களைக் கேட்டுக் கொண்டு முணுமுணுத்துக் கொண்டிருக்கும் போது… பழைய பாடல்களைத் தூசு தட்டி, பாஜக., இந்தப் பிரசாரப் பாடல்களைக் களம் இறக்கியுள்ளது. இதனை சமூகத் தளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.