யாதவ மக்களை அவமதித்த கனிமொழி! தூத்துக்குடியில் பரபரப்பு!

Published:

kanimoshi karuna - 2026

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி தேர்தல் பிரச்சாரத்தின் போது யாதவ மக்களை அவமதித்ததாக புகார் எழுந்துள்ளது.

யாதவ மக்களின் கிருஷ்ணர் ஆலயத்தில் மாலை போட்டு வணங்க அழைத்தபோது அவர் மறுத்ததாகவும் இதனால் அந்த பகுதி மக்கள் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருங்குளம் ஒன்றிய ராமானுஜன் புதூருக்கு பிரச்சாரம் செய்வதற்காக கனிமொழி வந்த போது அங்கு கூடி இருந்த திமுக நிர்வாகிகள் அவரை வரவேற்றனர் …

அப்போது உடன் இருந்த சிலர் கனிமொழியை  அங்குள்ள  கிருஷ்ணர் கோயிலில் உள்ள சிலைக்கு மாலை அணிவிக்க அழைத்தனர் ..

யாதவ சமூகத்தினர் அதிக அளவில் வசிக்கும் கிராமமான அதில் கிருஷ்ணர் கோயில் பஜனை மடங்கள் உண்டு அந்நிலையில் அம்மக்கள் விடுத்த கோரிக்கையை மறுத்த கனிமொழி கிருஷ்ணர் சிலைகள் எல்லாம் நான் மாலை அணிவிக்க முடியாது எங்கள் குடும்ப வழியில் இது போன்று எதுவும் நடந்ததில்லை என்று கூறி மறுத்தாராம் இது அங்கிருந்த  திமுக நிர்வாகிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

இதனால் வருத்தப்பட்ட அப்பகுதி யாதவ மக்கள் எங்களது ஓட்டு மட்டும் வேண்டும் எங்கள் வழக்கங்கள் கலாச்சாரத்தை நீங்கள் படிக்க மாட்டீர்களா என்று கேள்வி எழுப்பினர்

இதனால் அதிர்ச்சி அடைந்த கனிமொழி மற்றும் திமுக நிர்வாகிகள் அப்பகுதி மக்களை சமாதானப் படுத்தும் வேலையில் இறங்கினர்

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது இதையடுத்து வேறு வழியின்றி கனிமொழி அங்கிருந்து அடுத்து கிராமத்திற்கு சென்றார்.

Related articles

Recent articles

spot_img