கிருஷ்ண பரமாத்மா அருளால் நான் நலமுடன் உள்ளேன்: ஹேமாமாலினி வெளியிட்ட வீடியோ!

இந்தியா சற்றுமுன் சினிமா
hemamalini

கிருஷ்ண பகவான் ஆசியுடன் நான் நலமுடன் உள்ளேன் என்னை பற்றிய வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என பாலிவுட் நடிகை ஹேமமாலினி இன்ஸ்டாகிராம் மூலம் வீடியோ வெளியிட்டுள்ளார்.

முன்னாள் பாலிவுட் நடிகை ஹேமமாலினி,71, வயது முதுமையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரவியது.

hemamalini

பாலிவுட் நடிகர் அமிதாப் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பரபரப்பிற்கிடையே ஹேமமாலினி குறித்த செய்தியால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து ஹேமமாலினியின் மகள் இஷா தியோல், எனது தாயார் நலமுடன் உள்ளார். வீண் வதந்தியை நம்ப வேண்டாம் என டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார்.

இந்நிலையில் ஹேமமாலினி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் எனக்கு ஒரு குறையுமில்லை. கிருஷ்ண பகவான் ஆசியுடன் நலமுடன் உள்ளேன். கொரோனா பாதிப்பால் நீங்கள் பாதுகாப்புடன் வீட்டிலேயே இருங்கள். இவ்வாறு அந்த வீடியோவில் வெளியிட்டுள்ளார்.

இதே போல் கடந்த வாரம் பின்னணி பாடகி எஸ் ஜானகியை குறித்தும் வதந்தி பரவியதும் அவர் தம் நலனை உறுதிபடுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.