சோழவந்தானில் கோயில் சிவாச்சாரியார்களுக்கு நிவாரணம்: பிராமண இளைஞர் அணி ஏற்பாடு!

சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
madurai brahmins help
madurai brahmins help

மதுரை மாவட்டம், சோழவந்தானில் பிராமண அமைப்பு சார்பில் கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு கொரோனாவையொட்டி, நிவாரணப் பொருட்களை பிரசாத் சாஸ்திரிகள், ரமேஷ் பட்டாச்சாரியார் ஆகியோர் வழங்கினர்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் சோழவந்தான் பிராமண இளைஞர் அணி சார்பில், திங்கள்கிழமை கோயில்களில் பணிபுரியும் சிவாச்சாரியார்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

கொரோனாவையொட்டி, நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பிராமண இளைஞர் அணித் தலைவர் எஸ். ராமசுப்பிரமணியம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் வி. பிரசாத் சர்மா முன்னிலை வகித்தார்.

வாத்தியார் கே. கிருஷ்ணமூர்த்தி, கோயில்களில் பணிபுரியும் சிவாச்சாரியார்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். பொருளாளர் தென்கரை பாலாஜி, உறுப்பினர்கள் ரமணன், நாகேஸ்வரன், மணிகன்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.