madurai alagappan nagar sastha temple kumbabhishekam - 2026

மதுரை அழகப்பன் நகர் தர்மசாஸ்தா ஆலய கும்பாபிஷேகம்!

சற்றுமுன் ஆன்மிகச் செய்திகள் மதுரை லைஃப் ஸ்டைல்
madurai alagappan nagar sastha temple kumbabhishekam - 2026

மதுரை அழகப்பன்நகர் ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயத்தில் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

மதுரை அழகப்பன்நகர் – முத்துப்பட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயத்தில், புதிய விக்ரஹ பிரதிஷ்டை மற்றும் மகா கும்பாபிஷேக பெருவிழா திங்கட்கிழமை) மிகச் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.

விழா நிகழ்வுகள்: இப்பருவத்தின் மங்களகரமான பராபவ வருடம் ஐப்பசி மாதம் 6-ம் தேதி (23.10.2026) வெள்ளிக்கிழமை மாலை கணபதி பூஜா, ஆசார்ய வர்ணம், ரக்ஷாக்ஷன ஹோமம் மற்றும் வாஸ்து சாந்தியுடன் கும்பாபிஷேக விழாத் தொடக்கப் பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் த்ரிகால பூஜைகள், சுதர்ஸன ஹோமம், புது விக்ரஹம் பெறப்பட்டு பிரதிஷ்டைக்கான சிறப்பு அதிவாச ஹோமங்கள் ஆகியவை வேத விற்பன்னர்களால் சிரத்தையுடன் நடத்தப்பட்டன.

இன்று (26.10.2026) திங்கட்கிழமை காலை துலா மாதம் அசுவினி நட்சத்திர சுபயோக சுபதினத்தில், காலை 6.15 மணி முதல் 7.15 மணிக்குள் மூலஸ்தானத்தில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பனுக்குப் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஜீவ ஆவாஹனம், உச்சபூஜை மற்றும் பரிவார தெய்வங்களுடன் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

சிறப்பு அம்சங்கள்: இக்கோவிலானது சபரிமலையைப் போன்றே 18 திருப்படிகளுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் அனைவரும் முறையான விரதமுறைகளைப் பின்பற்றி, இருமுடி கட்டி 18 படிகள் ஏறி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யும் சிறப்பு வசதியும் இங்கு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கும்பாபிஷேக விழாவைத் தொடர்ந்து, வருகை தந்திருந்த பக்தர்களுக்கு காலை 11.00 மணி முதல் மகத்தான அன்னதானம் வழங்கப்பட்டது. இப்பெருவிழாவில் திரளான ஐயப்ப பக்தர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பனின் அருளாசியைப் பெற்றனர்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை , ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலய அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கிளாசிக் ஆர். செல்வகுமார், இணை நிர்வாக அறங்காவலர் எஸ். சேதுராமன் மற்றும் விழாக் குழுவினர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.