அருண்விஜய் படத்தில் நடிக்க மறுத்த விஜய்!

சினி நியூஸ் சினிமா

vijay and arunvijay - 2026இளையதளபதி விஜய்யின் கால்ஷீட்டை பெற முயற்சி செய்து ஏமாற்றம் அடைந்த பல கோலிவுட் திரையுலகினர்களில் அருண்விஜய்யும் ஒருவர் என்பது சமீபத்தில் தெரிய வந்துள்ளது.

நடிகர் அருண்விஜய் கடந்த சில வருடங்களுக்கு முன் சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்து அதில் நடிக்க விஜய்யிடம் கால்ஷீட் கேட்டதாகவும், ஆனால் அந்த படத்தில் நடிக்க விஜய் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது

தயாரிப்பு என்பது ரிஸ்க்கான தொழில் என்றும், அவசரப்பட்டு தயாரிப்பு தொழிலில் ஈடுபட வேண்டாம் என்றும், தொடர்ந்து முயற்சி செய்தால் உங்கள் திறமைக்கு நிச்சயம் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று விஜய் தனக்கு அறிவுரை கூறியதாகவும், அவர் கூறிய அறிவுரையை கடைபிடித்ததால் இன்று தானும் ஒரு பிரபல நடிகராக கோலிவுட்டில் வலம்க் வருவதாகவும் அருண்விஜய், ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நெகிழ்ச்சியுடன் பதில் கூறியுளார்.

அருண்விஜய் தற்போது மணிரத்னம் இயக்கும் ‘செக்க சிவந்த வானம், பிரபாஸ் நடிக்கும் சாஹோ மற்றும் ‘தடம்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் அருண்விஜய்யை உச்சத்துக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.