Home அடடே... அப்படியா? ‘த சிஎம் ஆஃப் தமிழ்நாடு தளபதி விஜய்’..! சர்ச்சை விளம்பரம் மூலமே கல்லா நிரம்புமோ?

‘த சிஎம் ஆஃப் தமிழ்நாடு தளபதி விஜய்’..! சர்ச்சை விளம்பரம் மூலமே கல்லா நிரம்புமோ?

vijay 1
vijay 1
vijay 1

டிகர் விஜய் ரசிகர்கள் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டரால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. பிகில் திரைப்படம் நாளை திரைக்கு வரவுள்ள நிலையில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

பிகில் திரைப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் பெயர் கேப்டன் மைக்கேல். அதனை சுருக்கமாக சி.எம். என விஜய்யைக் குறிப்பிட்டு போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆளுங்கட்சிக்கும், விஜய்க்கும் இடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில் இந்த போஸ்டர் அதனை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘தலைவா’ திரைப்படம் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியானது. குறிப்பிட்ட தேதியில் இப்படம் தமிழகத்தில் வெளியாகவில்லை. அதற்கு காரணம் ஆளுங்கட்சிக்கு எதிரான கோபத்தை நடிகர் விஜய் சம்பாதித்தார் என்றே கூறப்பட்டது.

vijay

அரசியல் நோக்கத்திற்காகவே தனது படத்திற்கு விஜய் ‘தலைவா’ என பெயர் வைத்தது மட்டுமல்லாமல், அடைமொழியாக ‘டைம் டூ லீட்’ என்ற வாசகத்தையும் இணைத்திருந்ததாக அப்போது ஒரு புகார் எழுந்தது. இது ஆளும் அரசை மேலும் கடுப்பாக்கியதாக கூறப்பட்ட நிலையில், படம் வெளியீட்டு தேதிக்கு முந்தைய நாள், தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் எழுந்தன.

இதனையடுத்து படம் வெளியாகுவதற்கு உதவுமாறு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நடிகர் விஜய் வீடியோ மூலம் கோரிக்கை வைத்தார். அதன்பிறகு டைம் டூ லீட் என்ற வாசகமும் சில காட்சிகளும் நீக்கப்பட்டு படம் ஒருவழியாக வெளியானது.

vijay bigil

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ திரைப்படத்தில் ஆளுங்கட்சியின் திட்டங்களை விமர்சிக்கும் வகையில் பல காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதற்காக ஆளுங்கட்சி பிரமுகர்களும் அமைச்சர்களும் விஜய்க்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். மேலும் போராட்டங்களும் நடைபெற்றன. எப்படியோ அந்தப்படத்தின் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் நடவடிக்கைகளால் சர்க்கார் வெற்றிகரமாக திரையில் ஓடியது.

இந்நிலையில் பிகில் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் யாரை எங்க வைக்க வேண்டுமோ அவர்களை அங்கே வைக்க வேண்டும் என விஜய் பேசியது அனைவரும் அறிந்தது. இதை தமிழக ஆட்சியாளர்களை மனதில் வைத்து விஜய் பேசினார் என ஒரு சிலர் கூறினாலும், விஜயின் தந்தை அதனை மறுத்தார். எடப்பாடி பழனிசாமி தங்களுக்கு எதிரியல்ல என்றும், யாரையும் குறிப்பிட்டு அவர் பேசவில்லை எனவும் சாமதான படலத்தை மேற்கொண்டுள்ளார்.

vijai

கதை திருட்டு, அதிக டிக்கெட் விலை நிர்ணயம், சிறப்புக் காட்சிகள் ரத்து என பல சிக்கல்கள் பிகில் படத்தின் வெளியீட்டுக்கு முட்டுக்கட்டைகளாக நிற்கின்றன. வரும் 25-ஆம் தேதி பிகில் திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் ஒவ்வொரு தடைக்கற்களையும் விஜய் தரப்பு சிறிது சிறிதாக புறந்தள்ளி வருகிறது.

மதுரை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற பொறுப்பாளர் தங்கபாண்டியன் ஒட்டியுள்ள போஸ்டரில் ”சி.எம். ஆஃப் தமிழ்நாடு” என்ற வாசகத்தை அச்சடித்து அதில் விஜய் படமும் போடப்பட்டுள்ளது.

மதுரையில் தல்லாகுளம், சிம்மக்கல், கோரிப்பாளையம் போன்ற பல்வேறு இடங்களில், அரசியல் தலைவர்களுக்கு மறைமுகமாக சவால் விடுக்கும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

இதனிடையே பிகில் படத்தில் விஜய் கதாபாத்திரத்தின் பெயர் கேப்டன் மைக்கேல் அதனை சுருக்கி சி.எம்.என போட்டதாக விஜய் ரசிகர் மன்றத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Translate »