
செங்கோட்டை அருள்மிகு தர்மஸம்வர்த்தினி சமேத குலசேகரநாத சுவாமி திருக்கோவிலில் தொடர்ந்து மூன்று வைபவங்கள் நடைபெறவுள்ளது. நாளை வெள்ளிக்கிழமை 25/10 அன்று திருக்கல்யாண வைபவம் நடைப்பெறுகிறது. இதன் நிகழ்ச்சி நிரல் மாலை 4 மணிக்கு மேல் திருக்கல்யாண வைபவம் தொடங்குகிறது.

மாலை மாற்றுதல், வேள்வி தீ வளர்த்தல், காப்பு இடுதல், கோத்திரம் மாற்றுதல் போன்ற வைபங்களைத் தொடர்ந்து, திருமாங்கல்ய தாரணம் நடைபெறும். சிறப்பு தீபாரதனையைத் தொடர்ந்து, நிகழ்ச்சியின் நிறைவாக சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெறும்.

அடுத்து திங்கட்கிழமை தொடங்கி சூரசம்கார திருவிழா நடைப்பெறயுள்ளது. இது அக்டோபர் 28 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 3 தேதி வரை நடைபெறுகிறது. 28 ஆம் தேதி காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்கி கொடியேற்றல் சிறப்பு தீபாரதனை என ஆரம்பம் ஆகிறது. 2 ஆம் தேதி மாலை 5 மணிக்கு முக்கிய நிகழ்வு சூரசம்ஹாரம் நடைபெறும். 3 ஆம் தேதி காலை ஆராட்டும், இரவு முருகபெருமானுக்கு திருக்கல்யாணமும் நடைபெறும்.

செவ்வாய்க்கிழமை குருப்பெயர்ச்சியை முன்னிட்டு தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறயுள்ளது. 29 ஆம் தேதி காலை 8 மணிக்கு சிற்ப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெறும்.

திருமணம் ஆகாதவர்களுக்கு இத்திருமண வைபவத்தில் பங்கு பெறுதல் மூலமும், மக்கட்பேறு இல்லாதவர்கள் சஷ்டி விரதம் இருந்து முருகனை தரிசிப்பதின் மூலமும் அருள்பெறலாம்.பக்தர்கள் அனைவரும் இந்த விழாக்களில் கலந்து கொண்டு தர்மஸம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகர நாத சுவாமி, சுப்பிரமணியசுவாமி மற்றும் தட்சிணாமூர்த்தியின் அருளைப் பெறுங்கள்.