December 6, 2025, 1:52 AM
26 C
Chennai

உளறாம சொல்லுங்க… முரசொலி நிலத்துக்கு பத்திரம் உண்டா… இல்லியா? : கேட்குது பாமக.,!

stalin ramadoss - 2025

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கையில், ‘ஸ்டாலின் பதற்றத்தில் உளற வேண்டாம்: முரசொலி நிலத்திற்கு பத்திரம் உண்டா… இல்லையா? தெளிவான பதில் தேவை!’ என்று கேட்டிருக்கிறார்.

முரசொலி அலுவலகம் அமைந்துள்ளது பஞ்சமி நிலத்தில் என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் டிவிட்டரில் பதிவிட்டார். இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், விவகாரத்தை திசை திருப்பும் நோக்கில் அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். அதே நேரம், பாஜக., மாநிலச் செயலர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் தேசிய தாழ்த்தப் பட்டோர் ஆணையத்தில் புகார் மனு அளிக்க, அது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது. ஒரு படத்தைப் பார்க்கப் போனோமா… இருந்தோமான்னு இல்லாம, அசுரன் படம் பஞ்சமி நிலம் பற்றி பேசுகிறது என்று திரியைக் கொளுத்திப் போட்டதே ஸ்டாலின் தான் என்று கூறுகின்றனர் சமூகத் தளங்களில்!

இந்நிலையில் பாஜக., பாமக.,வை இணைத்து, அதற்கு எதிராக திமுக., அறிக்கைகளை வெளியிட்டு வந்த நிலையில், மழுப்பும் வேலை வேண்டாம், தெளிவாக பதில் சொல்லுங்கள் என்று இரு கட்சிகளும் திமுக.,வை நெருக்குகின்றன.

இது தொடர்பாக இன்று பாமக., தலைவர் ஜிகே மணி வெளியிட்ட அறிக்கை….

முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் என்ற குற்றச்சாட்டு குறித்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 338-ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி விசாரணை நடத்தப் போவதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அறிவித்திருக்கிறது.
அதற்கு முன் முரசொலி நிலம் குறித்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களை தெரிவிக்கும்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு ஆணையிட்டுள்ளது. அதனால் ஏற்பட்ட பதற்றம் மற்றும் நடுக்கத்தின் காரணமாக இந்த விஷயத்தில் ஏற்கனவே கூறியதையே திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும், மீண்டும் உளறிக் கொண்டிருக்கிறார்.

முரசொலி விஷயத்தில் பதற்றப்படுவதற்கோ, உண்மையை அம்பலப்படுத்தி விட்டார் என்ற கோபத்தில் மருத்துவர் அய்யா அவர்கள் மீது வசை மாறி பொழிவதற்கோ எந்தத் தேவையும் இல்லை. முரசொலி நிலம் பஞ்சமி நிலம் இல்லை என்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 1985-ஆம் ஆண்டில் பெறப்பட்ட பட்டா ஒன்றை வெளியிட்டார்.

1960-களில் பின்னாளில் கட்டப்பட்ட முரசொலி கட்டிடம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் இல்லையென்றால், முரசொலி நிலம் தொடர்பான 1924-ஆம் ஆண்டின் UDR மூல ஆவணம் முதல் 1960களில் முரசொலி நிலம் வாங்கப்பட்டதற்கான நிலப்பதிவு ஆவணம் வரை அனைத்தையும் தானே மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்க வேண்டும் என்று மருத்துவர் அய்யா அவர்கள் எதிர்வினா எழுப்பியிருந்தார்.

மருத்துவர் அய்யா அவர்கள் எழுப்பிய வினாவை கடந்த 20&ஆம் தேதி நானும் எழுப்பியிருந்தேன். மருத்துவர் அய்யா அவர்களைத் தொடர்ந்து பிற கட்சித் தலைவர்களும், மொத்த தமிழகமும் இதே வினாவைத் மீண்டும், மீண்டும் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி பேராசிரியர் ஆர். சீனிவாசன் இதுகுறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் அளித்த புகாரின் பேரில் விசாரணைக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

மு.க. ஸ்டாலின் நேர்மையான அரசியல்வாதியாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? முரசொலி நிலம் குறித்த 1985-ஆம் ஆண்டின் பட்டாவை எவ்வளவு வேகமாக வெளியிட்டாரோ, அதே வேகத்தில் அந்த நிலம் குறித்த அனைத்து ஆவணங்களையும் வெளியிட்டு, முரசொலி நிலம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும்.

ஆனால், மருத்துவர் அய்யா அவர்கள் வினா எழுப்பி பல நாட்களாகியும் அதற்கு பதிலளிக்க முடியாத ஸ்டாலின், குழந்தைகள் விளையாடுவதைப் போல அரசியலில் இருந்து மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் விலக ஒப்புக்கொண்டால் மூல ஆவணத்தைக் காட்டுவதாக கூறி வருகிறார். இப்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் மனு கொடுத்த பேராசிரியர் சீனிவாசனை மருத்துவர் அய்யா அவர்களின் கைப்பாவை என விமர்சித்திருக்கிறார்.

நாட்டு நலன் கருதி மருத்துவர் அய்யா அவர்கள் எழுப்பும் வினாக்களை மீண்டும் எழுப்புபவர்கள் எல்லாம் மருத்துவர் அய்யா அவர்களின் கைப்பாவை என்றால் ஒட்டுமொத்த தமிழகமும் மருத்துவர் அய்யா அவர்களின் கைப்பாவை தான். இது மருத்துவர் அய்யா அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பெருமையளிக்கும் விஷயம் தானே தவிர, வருத்தப்படத்தக்கது அல்ல.

அதேநேரத்தில் இப்போது விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் இவை அல்ல…. மாறாக,

  • முரசொலி நிலம் தொடர்பான மூல ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று மருத்துவர் அய்யா அவர்கள் பலமுறை வலியுறுத்தியும் அவற்றை வெளியிட மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்?
  • முரசொலி நிலத்தை அதன் உரிமையாளர்கள் முறைப்படி வாங்கியிருந்தால், அந்நிலத்துக்கான 1985-ஆம் ஆண்டு பட்டாவைப் போலவே, நிலப் பதிவு ஆவணங்களும், மூலப் பத்திரங்களும் அவர்கள் வசம் இருந்திருக்க வேண்டும். ஆனால், நிலப்பதிவு ஆவணங்களை மு.க. ஸ்டாலின் இப்போது வரை வெளியிடவில்லை. அப்படியானால் அவர்களிடம் ஆவணங்கள் இருக்கின்றனவா, இல்லையா?
  • முரசொலி விவகாரத்தில் தமது சவாலுக்கு பதிலளிக்காமல் மருத்துவர் அய்யா அவர்கள் மவுனமாகி விட்டதாக ஸ்டாலின் கூறியிருக்கிறார். மருத்துவர் அய்யாவின் சார்பில் 20-ஆம் தேதி நான் விடுத்த அறிக்கையை அவர் படிக்கவில்லை போலிருக்கிறது. பூனை கண்களை மூடிக் கொண்டே இருந்து விட்டதால், இன்னும் பொழுது விடியவில்லை என்று கூறிக் கொண்டிருக்கிறது. சவால்களைக் கண்டு அஞ்சி ஓடிக்கொண்டிருப்பது மு.க.ஸ்டாலின் தான். அவரது பக்கம் நியாயமிருந்தால், அவரது மடியில் கணமில்லை என்றால் மூல ஆவணங்களை வெளியிடாது ஏன்?
  • மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது வன்னியர் கல்வி அறக்கட்டளை விவகாரத்தில் மருத்துவர் அய்யா அவர்கள் மீது அவதூறு புகார்களை ஸ்டாலின் அள்ளி வீசினார். அதை நிரூபிக்கத் தயாரா? அவ்வாறு நிரூபிக்காவிட்டால் அரசியலில் இருந்து விலகத் தயாரா? என்ற வினாவுக்கு இது வரை பதிலும் கூறாமல், அரசியலில் இருந்தும் விலகாமல் இருப்பது தான் மு.க. ஸ்டாலினின் நேர்மையா?
  • அரசியல் அறம் என்பதற்கு மு.க ஸ்டாலினுக்கு பொருள் தெரிந்திருந்தால் மேற்கண்ட அனைத்து வினாக்களுக்கும் பதிலளித்து விட்டு தான் அரசியல் பணிகளைத் தொடர வேண்டும். அதற்கான துணிச்சல் அவருக்கு உண்டா?

நிறைவாக ஒன்று….

முரசொலி விவகாரத்தில் தனது நிலையை நியாயப்படுத்த முடியாத மு.க.ஸ்டாலின் சிக்கலை திசை திருப்பும் வகையில் எதை எதையோ பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் பஞ்சமி நிலம் எங்கு இருந்தாலும் மீட்கப்பட வேண்டும் என்பதே பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. அதுமட்டுமின்றி, சென்னை அண்ணா அறிவாலயம், தமிழகத்தின் மற்ற மாவட்ட தலைநகரங்களில் திமுக தலைமை அலுவலகம் அமைக்க முறைகேடாக வளைக்கப்பட்ட இடங்கள் என எங்கு, யாருடைய நிலம் மோசடி செய்யப்பட்டிருந்தாலும் அதை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் தமிழக அரசையும், நீதித்துறையையும் கேட்டுக் கொள்ள பாட்டாளி மக்கள் கட்சி தயார்? பொய் வணிகர் மு.க. ஸ்டாலின் தயாரா? தெளிவான பதிலை திமுக அளிக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories