
மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் பாஜக., – சிவசேனா கூட்டணி வெற்றி முகத்தில் உள்ளது. எனவே கூட்டணி ஆட்சி மீண்டும் அமைப்பது உறுதியாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில், அதிகமான இடுங்களில் பாஜக., கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது.

காலை 10.30 நிலவரப் படி, பாஜக., மட்டும் 110 இடங்களுக்கும் மேல் முன்னிலையில் உள்ளது. சிவசேனா 72 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை 145 என்ற நிலையில், பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் பாஜக, – சிவசேனா கூட்டணி முன்னிலையில் உள்ளது.
அதே நேரம், கடும் போட்டியாக தேசியவாத காங்கிரஸ் 49 இடங்களிலும், காங்கிரஸ் 38 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.
பாஜக.,வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்ற நிலையில், கூட்டணி ஆட்சி குறித்து மீண்டும் பேசப்படும் என்றும், இந்த முறை கூட்டணிக் கட்சியான சிவசேனாவுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.