சீமராஜா’ படக்குழுவினர்களுக்கு பிரிவு உபச்சார விழா

சீமராஜா' படக்குழுவினர்களுக்கு பிரிவு உபச்சார விழா

பொதுவாக ஒரு படத்தின் படப்பிடிப்பு முடியும் நாளில் சிறிய பூஜை மட்டும் நடத்தி படக்குழுவினர்களுக்கு நன்றி சொல்வது மட்டுமே கோலிவுட் திரையுலகில் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘சீமராஜா’ படத்தின் தயாரிப்பாளர் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதை அடுத்து ஒரு பிரிவு உபச்சார விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

நேற்று நடைபெற்ற இந்த விழாவில் சிவகார்த்திகேயன், சூரி உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வந்த படப்பிடிப்பிற்கு நன்றி கூறும் விழாவாக இந்த இந்த பிரிவு உபச்சார விழா நடைபெற்றதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பொன்ராம் இந்த படத்தை பிரமாண்டமாக இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி, யோகிபாபு, மனோபாலா, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் நடிகை கீர்த்திசுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதம் இந்த படம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது