விஜய் அடிமையான வீடியோ கேம் இதுதான்

Published:

vijay mvoies - 2026

இளையதளபதி விஜய் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் முன்பெல்லாம் அமைதியாக ஏதாவது யோசித்து கொண்டிருப்பார் என்று படக்குழுவினர் கூறுவதுண்டு. ஆனால் இப்போது ஓய்வு நேரத்தில் ஒரு வீடியோ கேமை விளையாடி வருவதாகவும், அந்த கேமிற்கு விஜய் அடிமையாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

விஜய்யை அடிமைப்படுத்திய அந்த வீடியோ கேம் ‘Flight Simulator’ என்ற மொபைல் வீடியோ கேம் என்பதும் இந்த கேம் உலகம் முழுவதும் பல மில்லியன் பேர்களால் விரும்பி விளையாடப்படும் ஒரு கேம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘Flight Simulator - 2026ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘தளபதி 62’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய் ஓய்வு நேரத்தில் இந்த கேமை விளையாடி கொண்டிருந்ததாகவும், இதுகுறித்து படப்பிடிப்பு குழுவினர் ஒருவர் கேட்டபோது இந்த கேம் தான் தன்னுடைய தற்போதைய பொழுதுபோக்கு என்று கூறியதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் நாளை விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img