முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி காம வக்கிர ஆசிரியர் ஹபீப் முகமது மீது குண்டர் சட்டம்!

கல்வி சற்றுமுன் தமிழகம்
habip muhamad - 2026

முதுகுளத்தூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் ஹபீப் முகமது மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ராமநாதபுரம், முதுகுளத்தூரில் அரசு உதவி பெறும் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றியவர் ஆசிரியர் ஹபீப் முகமது.

பள்ளி மாணவிகளிடம் செல்போனில் ஆபாசமாக பேசியும், மாணவிகள் வீட்டிற்கு தெரியாமல் அவர் வீட்டுக்கு வருமாறும் மாணவிகளை அழைத்து பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட ஆடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஆசிரியர் ஹபீப் முகமது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

hapib - 2026

கடந்த 22-ம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இவரிடம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து, ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், இவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவிடம் பரிந்துரை செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஹபீப் முகமதை குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.