சந்திர கிரகணம் : ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 18 ஆம் நாள் 31.1.2018 புதன் கிழமை மாக பகுள பெளர்ணமி பூசம் நக்ஷத்திரத்தில், ஆயில்யம் நட்சத்திரம் 1 ஆம் பாதம் கடகம் இராசியில் கன்னியா லக்கினத்தில் சந்திர கிரகம் ஆரம்பம் ஆகி முடிவடைகிறது.
சந்திர கிரகணம் ஆரம்ப காலம் பாதாளத்தில் 5.16 க்கு
மத்திய காலம் இரவு மணி 6.58 க்கு
சந்திர கிரகண முடிவு காலம் இரவு 8.40 க்கு
சாந்தி செய்ய வேண்டியவர்கள் : புதன் கிழமை பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்ள வேண்டும். அதே போல, புனர்பூசம், பூசம், ஆயில்யம், விசாகம், கேட்டை, பூரட்டாதி, அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்ள வேண்டும்.
உணவு உண்ணும் நேரம் : காலை முதல் மாலை வரையில் போஜனம் செய்யக்கூடாது. சிரார்த்தம் மறுநாள் பெளர்ணமி திதியில் செய்ய வேண்டும்.
தர்ப்பணம் : மாலை 5.16 க்கு ஸ்நானம், மாலை இரவு மணி 6.58 க்கு தர்ப்பணம். இரவு மணி 8.40 க்கு ஸ்நானம் செய்ய வேண்டும். கர்ப்பம் அடைந்த பெண்கள் மாலை 5.00 மணி முதல் இரவு 8.50 வரையில் சந்திரனை பார்க்கக் கூடாது. இரவு 9.00 மணிக்கு மேல் சந்திர தரிசனம் செய்யலாம்.
கிரஹணம் விட்ட பின்னர் ஆலயம், வீடு சுத்தப்படுத்தும் நேரம் : 31.1.2018 புதன் கிழமை இரவு மணி 9.40 க்கு ஆலயம் வீடு சுத்தப் படுத்தி ஸ்நானம் செய்து அவரவர் சம்பிரதாயப்படி பூஜை செய்து கொள்ள வேண்டும்.