thruparankundram murugan to puttu thiruvizha - 2026

புட்டுத் திருவிழாவுக்குப் புறப்பட்டார் பரங்குன்றம் சுப்பிரமணியர்!

ஆன்மிகச் செய்திகள் மதுரை லைஃப் ஸ்டைல்
thruparankundram murugan to puttu thiruvizha - 2026

ஆவணி மூலத் திருவிழாவை முன்னிட்டு பாண்டிய மன்னாக புறப்பட்டார் அருள்மிகுசுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் தங்க பல்லாக்கில் எழுந்தருளினார்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் புட்டு திருவிழா நடைபெறவுள்ளது. அதில் , கலந்து கொள்வதற்குகாக திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு இன்று காலை உற்சவ சன்னதியில் சர்வ அலங்காரம் செய்யப்பட்டு தீப தூப ஆராதனைகள் அறக்கட்டளை சார்பில் முன்னாள் அறங்காவலர் சண்முகசுந்தரம் சார்பில் நடைபெற்றது..

அதன் பின்பு அலங்கரிக்கப்பட்ட தங்க பல்லாக்கில் சுவாமி எழுந்துருளி மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.
மதுரையில் நடைபெறும். புட்டு திரு விழாவில் கலந்து கொண்டு பின்பு வருகின்ற 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி தெய்வானை அம்மன் பூப்பல்லாக்கில் எழுந்துருளி திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்தடைவார்கள்.

விழா ஏற்பாடுகளை, கோயில் நிர்வாக அதிகாரி ஸ்ரீதேவி கோயில் ஸ்தானிய பட்டர்கள் கோவில் ஊழியர்கள் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.