
வரும் ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பாகமாக பாரதத்தின் ஸ்டார் பாக்சர் ஆறு முறை உலக சாம்பியன்ஷிப் வென்ற மேரி கோமுக்கு அரிய கௌரவம் கிடைத்துள்ளது.
இந்த மெகா நிகழ்ச்சிக்கு தொடர்புடைய 10 அம்பாசிடர்களில் மேரி கோம் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.
மகளிர் அதெலடிக் பிரிவில் ஆசியாவிலிருந்து மேரி கோம் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் மிக அதிக பதக்கங்களை வென்ற பாக்ஸராக ரிகார்டு சாதித்த மேரி கோம் … ஐந்து முறை ஆசியா சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார்.
தன் 51 கிலோ கேட்டகிரியில் காமன்வெல்த் போட்டிகளில் கோல்ட் மெடலோடு ஆசியா கேம்ஸ் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
அதனால் மேரி கோமை ஆசியாவிலிருந்து மகளிர் பிரிவில் அம்பாசிடராக நியமிக்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ( ஐஓசி) தீர்மானித்துள்ளது.