
அலுவலகத்தில் கூட ஹெல்மெட் அணிந்து பணிபுரியும் ஊழியர்கள்.
உத்தரபிரதேசத்தில் பந்தா மாவட்டத்தைச் சேர்ந்த மின்சார வாரிய ஊழியர்கள் தினமும் ஹெல்மெட் அணிந்தே அலுவலகம் வருவர். அதுமட்டுமல்ல. அலுவலகத்திற்கு வந்த பின்னும் கூட ஹெல்மெட்டை கழற்றி வைக்காமல் வேலை செய்வார்.
மத்திய அரசு பிறப்பித்த மோட்டார் வாகன சட்டத் திருத்தம் 2019 ன் மேல் உள்ள அச்சத்தாலோ பக்தியாலோ இவர்கள் அவ்வாறு செய்யவில்லை.
பணிபுரியும் இடத்தில் உயிரை காத்துக் கொள்வதற்கு வேறு வழியின்றி இந்த மார்க்கத்தை கடைபிடிக்கின்றனர்.
மின்சார வாரியத்தை சேர்ந்த பந்தா மாவட்டத்தின் ஒரு அலுவலகம் சிதிலமடைந்துள்ளது. மேற்கூரை உடைந்து எப்போது தலைமேல் விழுமோ என்பது தெரியாத நிலை . சிறிய மழைக்கே நீர் ஒழுகும் பரிதாபம்.
இதுகுறித்து மேலதிகாரிகளுக்கு புகார் அளித்தும் பலன் இல்லாமல் போனதால் ஊழியர்கள் மாற்று வழியாக ஹெல்மெட் அணிந்து பணி புரிவதை தேர்ந்தெடுத்துள்ளனர் .
ஹெல்மெட் அணிந்து ஆபீஸில் பணிபுரியும் ஊழியர்களின் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதால் யோகி ஆதித்யநாத் அரசு மீது விமர்சனம் எழுந்துள்ளது.