
ஹைதராபாத் நகரில், குப்பைத் தொட்டியில் திடீரென மர்ம பொருள் வெடித்ததால், குப்பை பொறுக்கச் சென்ற பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். சத்தம் கேட்டு மக்கள் பதற்றம் அடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. .
ஹைதராபாத் நகரில் மீர்பேட் விஜயநகர் காலனியில் ஒரு குப்பைத் தொட்டியில் மர்மப் பொருள் வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் குப்பையை சேகரித்து கொண்டிருந்த ஒரு பெண் தீவிரமாக காயமடைந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
அந்தப் பெண் ஒரு டப்பாவைத் திறக்க முயற்சி செய்தார் என்றும், அதில் ரசாயனங்கள் நிறைந்திருந்தது என்றும், அப்போதுதான் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாகவும் நகர போலீஸார் கூறியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த துப்புத் துலக்கும் குழுவினர் வெடிப்பு சம்பவம் குறித்து விவரங்களை சேகரித்து வருகின்றனர். காயமடைந்த பெண்மணி தேவரகொண்டாவைச் சேர்ந்த நிர்மலா என்று தெரியவந்துள்ளது.