JALLIKATTU 3 - 2026
file picture

சித்தூர் மாவட்டத்தில் நடத்திய ஜல்லிக்கட்டு ரத்தக் களரியானது. போலீசார் அனுமதி நிராகரித்தாலும் தம் இஷ்டத்திற்கு ஜல்லிக்கட்டு நடத்தியுள்ளனர்.

கிராமிய கலாச்சாரம் என்று கூறிக்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் துன்புறுத்தும் இந்த விளையாட்டு சில குடும்பங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சித்தூர் மாவட்டத்தில் ஞாயிறன்று நடந்த ஜல்லிக்கட்டு ஆபத்தாக முடிந்தது. ராமகுப்பம் கிராமத்தில் ஜல்லிக்கட்டால் ஒரு இளைஞன் மரணம் அடைந்தார். மேலும் மூவருக்கு தீவிர காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்தவமனையில் ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இளைஞர் மீது காளை பாய்ந்ததால் கொம்பு அவர் உடலில் குத்திக் கிழித்தது. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணித்தார்.

சங்கராந்திக்கு ஒரு மாதம் முன்பிருந்தே சித்தூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம் ஆகிவிட்டது. மைதானத்தில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு கூட செய்து கொள்ளவில்லை. போலீசார் அனுமதியும் கிடைக்கவில்லை.

இவ்வாறு இளைஞர்களின் உயிரோடு விளையாடுவது பற்றி பொதுமக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

ALSO READ:  இடதுசாரிகளின் இரட்டை வேடம்: தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending