telangana earthquake - 2026

தெலங்காணாவில் ஞாயிறு அன்று விடியற்காலை பூமி அதிர்ந்தது. இதனால் உள்ளூர்வாசிகள் அச்சத்தோடு வெளியே ஓட்டம் எடுத்தனர். சூர்யாபேட்டை சிந்தலபாலெம் மண்டலத்தில் பூகம்பம் ஏற்பட்டது.

விடியற்காலை 2.37 நிமிடங்களுக்கு பெரிய அளவில் சப்தத்தோடு பூமி அதிர்ந்தது. சுமார் 41 செகண்டுகள் பூமி அதிர்வு நேர்ந்தது. ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. பூமியின் உள்ளே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் பூமியின் பாளங்களில் அசைவுகள் ஏற்பட்டதாக என்ஜிஆர்ஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹுஜூர்நகரோடு சேர்ந்து சூர்யா பேட்டை, நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் பூகம்பம் வெளிப்பட்டது. கடந்த ஒரு மாத காலமாக சிறிய அளவில் சிந்தலபாலெம் மண்டலத்தில் பூமி அதிர்வுகளை உள்ளூர்வாசிகள் கவனித்து வந்தனர். அதனால் அவர்கள் அச்சத்தோடு நாட்களை கடத்துகிறார்கள்.

ஞாயிறு அன்று விடியற்காலை 4.4 தீவிர ரிக்டர் அளவில் பூகம்பம் நிகழ்ந்தது. சிந்தலபாலெம் மண்டலத்தில் மீண்டும் ஐந்து மணிக்கு விடியற்காலை சிறிய அளவில் நான்கு முறை பூமி அதிர்ந்தது.

பெரிய பெரிய சத்தங்களோடு பலமுறை பூமியின் பாளங்களில் அசைவுகள் நிகழ்கின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள். மேற்குறிப்பிட்ட இடங்களில் இருக்கும் மக்கள் வீட்டில் தங்க வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending