jaganmohan

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்ஆர் வெங்கடாபுரம் கிராமத்தின் ரசாயண ஆலையில் இன்று அதிகாலையில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. இந்த வாயுக்கசிவு காற்றில் பரவியதால் அந்த ஆலையை சுற்றியிருந்த மக்களுக்கு மூச்சுத்திணறல், மயக்கம், கண்எரிச்சல் போன்ற விளைவுகள் ஏற்பட்டது.

இதுவரையில் இந்த வாயுக்கசிவிற்கு ஒரு குழந்தை உள்பட இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நேரில் சந்தித்து பேசினார். அப்போது, அரசு அனைத்து உதவிகளையும் சிறப்பாக செய்து தரும் எனக் கூறி ஆறுதல் கூறினார்.
இதைதொடர்ந்து, ஆந்திராவில் வாயுக்கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending