ஜூலை 1 ல் பள்ளிகள் திறப்பு! பள்ளி கல்வித்துறை!

இந்தியா கல்வி
school 1 - 2026

கர்நாடகத்தில் ஜூலை 1 முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அந்த மாநில பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

பள்ளிகள் திறப்பு பற்றி, மாநில அரசுகள், கல்வி நிறுவனங்களுடனும், பெற்றோர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும், அதிலிருந்து கிடைக்கும் கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது பற்றி ஜூலை மாதம் முடிவு செய்யப்படும் மத்திய உள்துறை அமைச்சகம் மே 30-ஆம் தேதி தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ஜூலை 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக கர்நாடக மாநில பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி, 4 முதல் 7-ஆம் வகுப்புகளுக்கு ஜூலை 1-ஆம் தேதி வகுப்புகள் தொடங்குகின்றன. 1 முதல் 3-ஆம் வகுப்புகளுக்கும், 8 முதல் 10-ஆம் வகுப்புகளுக்கும் ஜூலை 15-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.