lunar eclipse
lunar eclipse

இன்று ஜூன் 5 வெள்ளிக்கிழமை பௌர்ணமியோடு சந்திர கிரகணமும் சேர்ந்து வருகிறது. ஆனால் இதனை பிரச்சாயா சந்திரகிரகணம் என்பர். இதனை ஆங்கிலத்தில் பெனும்பரல் லூனார் எக்லிப்ஸ் என்பர்.

இரவு 11.16 இல் இருந்து நள்ளிரவு தாண்டிய பின் 2 மணி 54 நிமிடங்கள் வரை உள்ளது. இந்த நேரத்தில் சந்திரன் ஒளி குறைந்து காணப்படுவானே தவிர கருமையான கிரகண பிம்பமாக தெரியமாட்டான்.

இவ்விதம் ‘ப்ரச்சாயா’ எனப்படும் பூமி நிழலில் நிகழும் கிரகணத்தை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. எந்தவித கிரகண நியமங்களும் கடைபிடிக்க வேண்டிய தேவையில்லை. ஆர்வம் உள்ளவர்கள் இரவு சந்திரனின் ஒளி மங்குவதைப் பார்க்கலாம்.

இதனை பெரும்பரல் லூனார் எக்லிப்ஸ் என்பார்கள். இந்த கிரகணத்தின்போது பௌர்ணமி நிலவில் இருந்து சந்திரனில் பெரிய வேறுபாடு தெரியாது. இந்த ஆண்டு ஜனவரி 10ல் ஏற்பட்டது போலவே தான் இதுவும் பெனும்பிரல் சந்திர கிரகணம். சந்திரன் பூமியின் வெளிப்பகுதியை கடக்கும் போது ஏற்படுவதன் விளைவு இது.

பௌர்ணமியின் போது சந்திரன் பூமி சூரியன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும். சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையே பூமி வரும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. சூரிய ஒளி நேராக சந்திரன் மீது படுவதை பூமி தடுப்பதால் சந்திரன் மீது நிழல் விழுகிறது.

ALSO READ:  'வந்தேமாதர'த்தை மதச் சண்டையாக்க வேண்டாம்!

இம்மூன்றும் எவ்விதத்தில் அமைகிறதோ அதனைக் கொண்டு மூன்றுவித சந்திர கிரகணங்கள் ஏற்படுகின்றன. முழு சந்திர கிரகணம், பகுதிநேர சந்திரகிரகணம், பெனும்பிரல் சந்திரகிரகணம் என்று இதனை பிரித்துள்ளார்கள்.

சூரியன் பூமி சந்திரன் மூன்றும் சற்று சாய்வான கோட்டிலிருக்கையில் பூமி, சூரியனின் ஒளி நேராக சந்திரன் மீது படுவதைத் தன் வெளிப்பகுதியால் தடுக்கும் போது பெனும்பரல் சந்திர கிரகணம் நேர்கிறது. பூமியின் வெளிப்பகுதி ‘பெனும்பரா’ எனப்படுகிறது.

பூமியின் கருமையான நிழலை விட பெனும்பராவின் நிழல் நலிவாக தென்படுவதால் பெனும்பரல் சந்திர கிரகணத்தை பௌர்ணமி நிலவில் இருந்து வேறுபடுத்தி அறிவது கடினம்.

இதுதவிர 2020ல் ஜூலையில் ஒன்றும் நவம்பரில் ஒன்றுமாக இன்னும் இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழ உள்ளன. இவையும் கூட பெனும்பிரல் சந்திர கிரகணங்களே.

10, ஜனவரி 2020 ல் நடந்த சந்திர கிரகணத்தை Wolf Moon Eclipse என்றழைத்தனர். இன்றைய கிரகணத்தை ஸ்ட்ராபெர்ரி மூன் எக்கிலிப்ஸ் என்கின்றனர். இது 57 சதவீதம் சந்திரனின் பகுதி பூமியின் வெளிப்பகுதியான பெனும்பராவைக் கடந்து பயணிக்கும் போது நேர்கிறது.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending